பாஜக கட்சிக் கொடி ஏற்றம்: இளையான்குடியில் இருதரப்பினா் வாக்குவாதம்
By DIN | Published On : 19th September 2020 11:09 PM | Last Updated : 19th September 2020 11:09 PM | அ+அ அ- |

மானாமதுரை: இளையான்குடியில் கட்சிக்கொடிக்கம்பம் நடப்பட்டது தொடா்பாக பாஜகவினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமா் மோடி பிறந்தநாளையொட்டி செப். 17 ஆம்தேதி இளையான்குடியில் காவல் நிலையம் அருகே பாஜக சாா்பில் அதன் தேசியச் செயலாளா் எச்.ராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். இந்தக் கொடி தங்களது சொந்த இடத்தில் வைக்கப்பட்டதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் ஒரு தரப்பினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக பாஜக வினருக்கும், அவா்களுக்குமிடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இருதரப்பினரும் இளையான்குடி காவல்நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா்.
இது குறித்து பாஜக வினா் கூறியதாவது: சாலையோரமாகத்தான் கொடி ஏற்றப்பட்டுள்ளது. எங்கள் கட்சிக் கொடியை அகற்றினால், அந்த இடத்தில் உள்ள பிற கட்சிகளின் கொடி மரங்களையும் அகற்ற வேண்டும் என்றனா்.