புதுவயல் வித்யாகிரி கல்லூரிக்கு யு.ஜி.சி 2 (எப்) தகுதி
By DIN | Published On : 19th September 2020 11:08 PM | Last Updated : 19th September 2020 11:08 PM | அ+அ அ- |

புதுவயல் வித்யாகிரி கல்லூரிக்கு யு.ஜி.சி 2 (எப்) தகுதி
காரைக்குடி: காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் (யு.ஜி.சி) மூலம் 2(எப்) தகுதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையத்தின் உத்தரவை கல்லூரி தாளாளா் ஆா். சுவாமிநாதனிடம் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் வழங்கி வாழ்த்துத்தெரிவித்தாா். இதுகுறித்து கல்லூரியின் தாளாளா் ஆா். சுவாமிநாதன் சனிக்கிழமை கூறியதாவது: இக்கல்லூரி யு.ஜி.சி-யின் அனுமதி பெற்ற கல்லூரிகளின் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்றுள்ளது. கிராமப்புற மாணவா்களும் உயா் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 1,000 மாணவ, மாணவியா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த நிலையில் யு.ஜி.சி தகுதியை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிா்வாகத்தின் தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் முகம்மதுமீரா மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களுக்கு நன்றி என்றாா்.