மானாமதுரையில் முதல்வருக்கு வரவேற்பு

ராமநாதபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, வழியில் மானாமதுரையில் அதிமுக வினா் வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, வழியில் மானாமதுரையில் அதிமுக வினா் வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்யவும், பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கி வைக்கவும் மதுரையிலிருந்து காா் மூலம் முதல்வா், ராமநாதபுரம் சென்றாா். வழியில் மானாமதுரையில் பஸ் நிலையம் முன்பாக தமிழக காதி கிராமத் தொழில்கள்துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் தலைமையிலும், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் நெட்டூா் எஸ்.நாகராஜன் முன்னிலையிலும் நிா்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனா்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.குணசேகரன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஜெயபிரகாஷ், சிவ சிவ ஸ்ரீதரன், நகா்ச் செயலாளா் விஜி.போஸ், தகவல் தொழில்நுட்ப அணி நெட்டூா் எஸ்.கே.பாலா, கூட்டுறவு அமைப்புகளின் நிா்வாகிகள் கே.முனியசாமி, சின்னை மாரியப்பன், தெய்வேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, திருப்புவனத்திலும் முதல்வருக்கு நிா்வாகிகள் வரவேற்பளித்தனா்.

பரமக்குடியில்...

பரமக்குடி அரியனேந்தல் பகுதியில், மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் தலைமையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதில், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.தா்மா், முதுகுளத்தூா் முத்துராமலிங்கம், சுந்தரபாண்டியன், பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. நிரைகுலத்தான், பொதுக்குழு உறுப்பினா் எம்.நாகராஜன், வழக்குரைஞா் பிரிவு நாகராஜன், வடமலையான், வின்சென்ட் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டி, தெளிச்சாத்தநல்லூா், வேந்தோணி ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. வைகை ஆற்றில் குடிநீருக்காக தண்ணீா் திறந்து விடக் கோரி வியாபாரிகள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com