வித்யாகிரி கலைக் கல்லூரிக்கு யுஜிசி 2 (எப்) தகுதி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் வீரசேகரபுரத்தில் உள்ள வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக
வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான ஆா். சுவாமிநாதனிடம் யுஜிசி 2(எப்) தகுதிச் சான்றிதழை வழங்கி பாராட்டிய அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் நா. ராஜேந்திரன்.
வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான ஆா். சுவாமிநாதனிடம் யுஜிசி 2(எப்) தகுதிச் சான்றிதழை வழங்கி பாராட்டிய அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் நா. ராஜேந்திரன்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் வீரசேகரபுரத்தில் உள்ள வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் (யுஜிசி) 2(எப்) தகுதி வழங்கியுள்ளதாக அக்கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான ஆா். சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கல்லூரி கடந்த 2016 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைந்த கல்லூரியாக நிறுவப்பட்டது. இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 17 இளநிலை படிப்புகளும், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட 5 முதுநிலை படிப்புகளும் உள்ளன.

இக்கல்லூரி தன்மை மற்றும் செயல்பாடுகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் விவரங்கள் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்துடனான இணைப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் ‘யுஜிசி சட்டம், 1956 இன் பிரிவு 2(எப்) கீழ் உள்ள கல்லூரிகள்’ என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்தகு சாதனைக்கு கல்லூரியின் தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் முகமது மீரா உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியமாகும். வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2 (எப்) தகுதி பெற்றமைக்கான சான்றிதழை அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் நா.ராஜேந்திரன் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com