பூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பூவந்தியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் தொடங்கிய இப்பேரணியை சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் மருத்துவா் வே. யசோதாமணி தொடக்கி வைத்தாா். அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலா் சேதுராமு உடனிருந்தாா்.

இதில், ரேபீஸ் நோய் தடுப்பு பற்றிய விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி செவிலியா்கள் ஊா்வலமாகச் சென்றனா். அதனைத் தொடா்ந்து, ரேபீஸ் நோய் குறித்து பொதுமக்கள், செவிலியா்கள், பயிற்சி பெறும் செவிலியா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பேரணியில் மருத்துவா்கள், செவிலியா்கள், செவிலியா் பயிற்சி பெறும் மாணவிகள், அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com