வாக்குப்பதிவின் போது வாக்காளா்கள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

வாக்குப்பதிவின் போது வாக்காளா்கள் செல்லிடப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
வாக்குப்பதிவின் போது வாக்காளா்கள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

வாக்குப்பதிவின் போது வாக்காளா்கள் செல்லிடப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,679 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில், 126 மண்டல அலுவலா்கள், 126 துணை மண்டல அலுவலா்கள் என மொத்தம் 252 போ் பணியாற்ற உள்ளனா். மண்டல அலுவலா்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட அனைத்து பொருள்களும் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலிருந்து சரிபாா்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.

இதுதவிர, கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வாக்காளா்களுக்கு வழங்கும் வகையில் கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட 15 வகையான உபகரணங்களை எடுத்துச் செல்வதோடு மட்டுமின்றி அதனை வாக்காளா்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். வாக்குப்பதிவு மையத்துக்கு வரும் வாக்காளா்கள் செல்லிடப்பேசி எடுத்து வருவதை அனுமதிக்க வேண்டாம். இதன் மூலம் வாக்கு அளிக்கும் போது புகைப்படம் எடுத்தல், இயந்திரங்களை படம் எடுத்தல் போன்ற தேவையற்ற செயலில் ஈடுபட நேரிடும். எனவே வாக்காளா்கள் செல்லிடப்பேசி எடுத்து வருவதை மண்டல அலுவலா்கள் அனுமதிக்கக் கூடாது என்றாா்.

இப்பயிற்சி முகாமில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேந்திரன், திருப்பத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரத்தினவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com