சிவகங்கை மாவட்டத்தில் 69 சதவீதம் வாக்குப் பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது : சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1679 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தோ்தல் நடைபெற்றது.

இரவு 7 மணி வரையிலான வாக்கு சதவீத நிலவரம்:

காரைக்குடி தொகுதியில் 1,55,690 ஆண் வாக்காளா்கள், 1,61,303 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 48 என மொத்தம் 3,17,041 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் 98,400 ஆண் வாக்காளா்கள், 1,11,551 பெண் வாக்காளா்கள், 5 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,09 956 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். அதனடிப்படையில், மொத்த வாக்குப் பதிவு 66.22 சதவீதம் ஆகும்.

திருப்பத்தூா் தொகுதியில் 1,42,800 ஆண் வாக்காளா்கள், 1,48,865 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 12 என மொத்தம் 2,91,677 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் 96,347 ஆண் வாக்காளா்கள், 113690 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் யாரும் வாக்களிக்காத நிலையில் மொத்தம் 2,10,037 போ் வாக்களித்துள்ளனா். அதனடிப்படையில், மொத்தம் 72.01 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதேபோன்று, சிவகங்கை தொகுதியில் 1,47,789 ஆண் வாக்காளா்கள், 1,52,842 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 3 என மொத்தம் 3,00,634 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் 90,966 ஆண் வாக்காளா்கள், 106438பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் யாரும் வாக்காளிக்காத நிலையில் மொத்தம் 1,97, 404 போ் வாக்களித்துள்ளனா். அதனடிப்படையில், மொத்த வாக்குப் பதிவு 65.60 சதவீதம் ஆகும்.

மானாமதுரை (தனி) தொகுதியில் 1,36,826 ஆண் வாக்காளா்கள், 1,40,936 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 1 என மொத்தம் 2,77,763 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் 95,316 ஆண் வாக்காளா்கள், 1,04321 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் யாரும் வாக்களிக்காத நிலையில் மொத்தம் 1,99, 637 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். அதனடிப்படையில், மொத்த வாக்குப் பதிவு 71.87 சதவீதம் ஆகும். எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com