சிவகங்கை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 163 பதற்றமான வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் எளிதாகச் சென்று வாக்களிக்கும் வகையில்
சிவகங்கை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 163 பதற்றமான வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் எளிதாகச் சென்று வாக்களிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் உள்பட போலீஸாா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாவட்டம் முழுவதும் உள்ள 1,679 வாக்குச் சாவடிகளில் 163 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டிருந்தது.

அந்த வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது மட்டுமன்றி, நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டனா். இதுதவிர, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் உள்பட ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். எனவே, பெரும்பாலான பதற்றமான வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றன.

காளையாா்கோவில் அருகே மறவமங்கலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் முகவா்களாக நியமிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குப் பதிவு அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

அதன்பின்னா், வாக்குப் பதிவு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, வாக்குச் சாவடிகள் அருகே பொதுமக்கள் அதிகம் கூடுதவதை தடுத்த போலீஸாா் வாக்குச் சாவடியின் முகப்பில் கடுமையான சோதனைக்கு பின்னரே வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்காளா்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com