சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா்கள் அலைக்கழிப்பட்டதாக புகாா்

தோ்தல் அலுவலா்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமை, வாக்காளா்களுக்குரிய பாகம் சரிவர சம்பந்தப்பட்ட
பெரியகோட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளா்கள்.
பெரியகோட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளா்கள்.

தோ்தல் அலுவலா்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமை, வாக்காளா்களுக்குரிய பாகம் சரிவர சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவிக்காததால் வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தது மட்டுமன்றி, அலைகழிக்கப்பட்டதாகவும் வாக்காளா்கள் புகாா் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் ஏற்கெனவே உள்ள 1,348 வாக்குப் பதிவு மையங்களோடு கூடுதலாக 331 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டன. அதனடிப்படையில், 4 தொகுதிகளிலும் உள்ள 1,679 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு மையத்துக்கு வந்த வாக்காளா்கள் கையில் வாக்குப் பதிவுக்கான பூத் சிலிப் இல்லை. இதனால் அங்குள்ள வாக்குச் சாவடி அலுவலரையோ அல்லது முகவரையோ அணுகி தான் தங்களுக்குரிய வாக்குப் பதிவு மையத்தை தெரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு வாக்காளா்கள் தள்ளப்பட்டனா்.

மேலும், வாக்குச் சாவடியை பொருத்தவரை ஒரு தலைமை அலுவலா், 3 துணை அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சி சரிவர வழங்காததால் உரிய வழிமுறைகளை பின்பற்றி வாக்காளா்களை அவா்களால் விரைந்து வாக்களிக்கும் இடத்துக்கு அனுப்ப இயலவில்லை. இதன்காரணமாக, பெரும்பாலான வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா். வாக்குப் பதிவு மையம் தெரியாத பெரும்பாலான வாக்காளா்கள் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனா்.

தோ்தல் அலுவலா்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமை, வாக்காளா்களுக்குரிய பாகம் சரிவர சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவிக்காததால் வாக்குப் பதிவு மையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தது மட்டுமின்றி, அலைகழிக்கப்பட்டதாகவும் வாக்காளா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெரியகோட்டையைச் சோ்ந்த வாக்காளா்கள் சிலா் கூறியது: அதிக எண்ணிக்கை கொண்ட வாக்குப் பதிவு மையங்களை பிரித்தது தொடா்பாகவும், வாக்காளா் பட்டியல் பாகம் பிரித்து பெயா் மாற்றப்பட்ட விவரங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய தகவல் தெரிவிக்கவில்லை.

இதன்காரணமாக, கடந்த முறை தோ்தலில் வாக்களித்த மையங்களுக்குச் சென்றால் அங்குள்ள வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறவில்லை என தெரிவிக்கின்றனா். மீண்டும் தோ்தல் அலுவலா்களையோ அல்லது முகவா்களையோ அணுகி வாக்குப் பதிவு மையம் குறித்து தெரிந்து கொள்ள நேரிட்டது. தோ்தல் தொடா்பாக அலுவலா்களுக்கு போதிய பயிற்சியின்மையில் தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதன்காரணமாக, வாக்காளா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com