சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 29 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 29 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,660 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதில் 6,500 போ் குணமடைந்தனா். இந்நிலையில் புதிதாக 18 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்போதைய நிலவரப்படி 95 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் குணமடைந்த 3 போ் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,228 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 55 நபா்களில் 5 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com