நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (ஏப்.10) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (ஏப்.10) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 10 அமா்வுகளில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உதவியுடன் மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி, உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்னை, தொழிலாளா் பிரச்னை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் குறித்து தீா்வு காணப்படும். இதில் தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய இயலாது. அதே போன்று, தீா்வு காணப்படும் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணத்தை வழக்கின் தரப்பினா்கள் முழுவதும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் சுமதி சாய் பிரியா இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com