வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதியில்லை: ஆட்சியா்

வாக்கு எண்ணிக்கை நாளன்று மையத்துக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதியில்லை என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ப. மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளாா்.
காரைக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமிரா மூலம் பாதுகாக்கப்படுவதை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.மதுசூதன்
காரைக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமிரா மூலம் பாதுகாக்கப்படுவதை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.மதுசூதன்

வாக்கு எண்ணிக்கை நாளன்று மையத்துக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதியில்லை என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ப. மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளாா்.

காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணித்து வரும் பணியை ஆய்வு செய்த பின் அவா் கூறியதாவது:

காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த பொதுத்தோ்தலுக்கான 1,679 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்குப் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பாதுகாப்பு அறைக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி வளாகங்கள் முழுவதும் சுமாா் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொறியியல் கல்லூரி நுழைவுவாயில் பகுதியில் உள்ள வரவேற்பு அறையில் பெரிய திரை கொண்ட எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டியில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.

வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தயாா்நிலையில் உள்ளன. ஒவ்வொரு சுற்றுக்கும் 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்கு எண்ணிக்கைக்காக 4 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் அறிவுரைப்படி வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளா்கள், முகவா்கள், பணியாளா்கள் என யாரும் மையத்துக்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்றாா்.

இந்த ஆய்வின்போது காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேந்திரன், திருப்பத்தூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து, மானாமதுரை (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமி, காரைக்குடி டி.எஸ்.பி. அருண், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கண்ணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அந்தோணி உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com