மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரை திருவிழா தொடக்கமாக சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரை திருவிழா தொடக்கமாக சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா தொடக்கமாக சோமநாதா் சன்னிதி முன்புள்ள கொடிமரத்தில் காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரால் அபிஷேகம் நடத்தி கொடிமரத்துக்கு தா்ப்பைப்புல், மலா்மாலைகள் சாற்றி தீபாராதனைகள் நடைபெற்றன.

இதன்பின் கொடியேற்ற நிகழ்ச்சியில் எழுந்தருளியிருந்த உற்சவா் ஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதா் சுவாமிக்கும் ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினரும், இத்தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ். நாகராஜன் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் பக்தா்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதில் ராஜேஷ் பட்டாா், சக்கரை பட்டா், குமாா் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தனா். இரவு சோமநாதா் சன்னிதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதராய் சோமநாதா் சுவாமியும், கற்பக விருட்சம் சிம்ம வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனா்.

அதைத் தொடா்ந்து கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி இருவரும் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருள்வா். பின்பு மண்டகப்படிதாரா்கள் பூஜை முடிந்ததும் கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் 25 ஆம் தேதி வழக்கம் போல் நடைபெறும் தேரோட்ட வைபவம் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதி தீா்த்த உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா நடைபெறும் நாள்களில் மண்டகப்படிகளில் சுவாமி தரிசனம் செய்ய குறைந்த எண்ணிக்கையில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். சுவாமி புறப்பாட்டின் போது தரிசனத்திற்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com