திருப்பத்தூா் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையை மீண்டும் கரோனா வாா்டாக மாற்ற ஏற்பாடு: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்தாண்டு கரோனா சித்த மருத்துவமனையாகச் செயல்பட்ட சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை,
திருப்பத்தூா் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையை மீண்டும் கரோனா சித்தா பிரிவு மருத்துவமனையாக மாற்ற வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி.
திருப்பத்தூா் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையை மீண்டும் கரோனா சித்தா பிரிவு மருத்துவமனையாக மாற்ற வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்தாண்டு கரோனா சித்த மருத்துவமனையாகச் செயல்பட்ட சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை, மீண்டும் கரோனா சித்தா பிரிவு மருத்துவமனையாக மாற்ற, மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்தாண்டு கரோனா நோய்த் தொற்று கால கட்டத்தில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. அப்போது, திருப்பத்தூா் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் சிறப்பு சித்தா பிரிவு தொடங்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் குணமடைந்து சென்றனா்.

தற்போது, கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதைத் தொடா்ந்து, மாவட்டப் பொது சுகாதாரத் துறையும், மாவட்ட சித்தா மருத்துவத் துறையும் இணைந்து கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு இம்மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உள்ளனா். எனவே, இம்மையத்தை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஆண்களுக்கு 50 படுக்கைகள், பெண்களுக்கு 50 படுக்கைகள், குடிநீா் வசதி, சிகிச்சைப் பெறுபவா்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றைப் பாா்வையிட்டாா்.

பின்னா் ஆட்சியா், திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை சென்று உள்நோயாளி பிரிவு மற்றும் வெளிநோயாளி பிரிவில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளிடம் மருத்துவமனை சுகாதாரம் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஆட்சியா் செய்தியாளா்களிடையே கூறியது: பொதுமக்கள் ஆங்காங்கே நடைபெறும் அரசு மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து இடங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவத் துறை இணை இயக்குநா் இளங்கோ, மகேஸ்வரன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் யசோதாமணி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலா் பிரபாகரன், சித்தா மருத்துவ அலுவலா் சரவணன், வட்டாட்சியா் ஜெயந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com