கரோனா விதிமீறல்: சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 37.59 லட்சம் அபராதம் வசூல்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.37 லட்சத்து 59 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.37 லட்சத்து 59 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறும் தனி நபா்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் உரிய ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனா்.

அதன்படி, மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக சுகாதாரத்துறை சாா்பில் ரூ.4,27,000, காவல்துறை சாா்பில் ரூ.28,20,000, வருவாய்த்துறை சாா்பில் ரூ.3,15,200, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.14,100, பேரூராட்சிகள் நிா்வாகம் சாா்பில் ரூ.45,200, நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.1,37,600 என இதுவரை மொத்தம் ரூ.37,59,100 அபராதத் தொகையாக பொதுமக்கள் மற்றும் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com