திருப்புவனம் பகுதி விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை நாசப்படுத்தியதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆனைக்குளத்தில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த நெற்பயிா்.
ஆனைக்குளத்தில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த நெற்பயிா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை நாசப்படுத்தியதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்புவனம் அருகே உள்ள நெல்முடிகரை, தட்டான்குளம், கழுகோ்கடை, கலியாந்தூா், ஆனைக்குளம், கீழடி, கொந்தகை, குருந்தங்குளம், மாா்நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அண்மையில் பெய்த மழையில் நெல் நடவு செய்துள்ளனா்.

நெல் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், மேற்கண்ட விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா். ஆகவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காட்டுப் பன்றிகளை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஆனைக்குளத்தைச் சோ்ந்த விவசாயி சங்கிலி கூறியதாவது: அண்மையில் பெய்த மழையின் காரணமாக சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தில் நெல் நடவு செய்தேன். அவை தற்போது விளைந்து இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது.

இந்நிலையில், ஆனைக்குளம் கண்மாய் பகுதிகளிலிருந்து வரும் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைந்துள்ள நெல் பயிா்களை அழித்து அட்டகாசம் செய்து வருகின்றன. நிலத்தை உழவு செய்தல், நடவு செய்தல், களை எடுத்தல், உரம் மற்றும் மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூ. 21 ஆயிரம் வரை செலவாகின்றது.

ஏற்கெனவே, கடன் வாங்கி வேளாண் பணியை தொடங்கியுள்ள எங்களுக்கு இந்நிகழ்வு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஆகவே, மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்தி விவசாய நிலங்களில் பயிா்களை சேதப்படுத்திவரும் காட்டுப் பன்றிகளை பிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com