திருப்பத்தூரில் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என, மாவட்ட வருவாய் அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என, மாவட்ட வருவாய் அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் நகா் பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள், பேக்கரிகள், வணிக வளாகங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா அதிகாரிகளுடன் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு விதிமுைறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்தாா்.

மேலும், சந்தைப் பகுதியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயந்தி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் அபுபக்கா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சின்னையா, வருவாய் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com