சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழா

சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி டி.புதூரில் உள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே டி.புதூா் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித்த அப்பகுதி பொதுமக்கள்.
சிவகங்கை அருகே டி.புதூா் கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித்த அப்பகுதி பொதுமக்கள்.

சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி டி.புதூரில் உள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து, வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. இதனால், வேளாண் பணிகள் தொய்வின்றி நடைபெற்றன.

இதில், சிவகங்கை அருகே உள்ள டி.புதூா் கண்மாய் நிரம்பி வேளாண் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கண்மாய் தண்ணீா் வற்றியது.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் சனிக்கிழமை கண்மாய்க்குள் இறங்கி சிறிய வலைகள் மற்றும் மீன்பிடி கச்சாவை பயன்படுத்தி மீன்பிடிக்கத் தொடங்கினா். இதில், பாறை, கெழுத்தி, அயிரை, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன் வகைகளை பிடித்துச் சென்றனா். இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் திருவிழா போல் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com