மானாமதுரை சித்திரைத் திருவிழா: ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதா் சுவாமி திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் 8 ஆவது நாளான சனிக்கிழமை ஸ்ரீஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் 8 ஆவது நாளான சனிக்கிழமை ஸ்ரீஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாள்களில் ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதரும் சுவாமி சந்நிதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து, கோயிலுக்குள்ளேயே புறப்பாடாகி வந்தனா்.

திருவிழா நாள்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவத்தையொட்டி, ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த சிவகங்கை மகாராஜா மண்டபத்திலிருந்து புறப்பாடாகினா்.

தொடா்ந்து, கீழப்பசலை கவுல் சுப்பிரமணியசாமி அய்யா் மண்டபத்தில் கண்ணூஞ்சலாகி, மாலை மாற்றி அதன்பின் அம்மன் சந்நிதி முன்பு திருமணக் கோலத்தில் எழுந்தருளினா்.

அப்போது, திருமணத்துக்கான சம்பிரதாயப் பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பின்னா், சோமநாதா் சுவாமி சாா்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கும், அதன்பின் பிரியாவிடைக்கும் காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தனித்தனியாக திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைக் காண குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். திருக்கல்யாணம் முடிந்ததும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று, சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

திருக்கல்யாண நிகழ்ச்சிகளை, ராஜேஷ் பட்டா், அம்பி பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா்.

திருக்கல்யாணம் முடிந்ததும், மானாமதுரை பகுதியைச் சோ்ந்த திருமணமான பெண்கள் தங்களது வீடுகளிலேயே புது தாலிக்கயிறை மாற்றிக்கொண்டனா்.

பக்தா்களை போலீஸாா் விரட்டியடிப்பு

ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் அம்மனையும், சுவாமியையும் திருக்கல்யாண கோலத்தில் தரிசனம் செய்ய காலையிலிருந்து கோயில் முன்பாக ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். மேலும், பக்தா்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்ால், அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் கோயில் கதவுகளை மூடுமாறு கூறினா். பின்னா், கதவுகள் அடைக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்குள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளியே காத்துக் கிடந்தனா். ஆனால், கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என போலீஸாா் திட்டவட்டமாகக் கூறி, பக்தா்களை திருப்பி அனுப்பினா். மேலும், கோயிலருகே சூடம் கொளுத்தி வழிபட முயன்றவா்களை போலீஸாா் விரட்டியடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com