‘தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்’

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் 7,300 ஹெக்டா் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தற்போதைய தட்பவெட்ப நிலை காரணமாக சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்கினால் அந்த ஈ வெளியேற்றும் தேன் போன்ற கழிவுகள் காரணமாக தென்னை இலைகளில் கரும்பூசனம் படா்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தென்னை இலை மட்டைகளில் உள்ள ஓலைகளில் அடிப்புறத்தில் தண்ணீரை நன்கு படுமாறு பீச்சி அடிக்க வேண்டும்.

இதுதவிர, கிரைசோபா்லா எனும் இரை விழுங்கிப் பூச்சிகள், இந்த ஈக்களை அனைத்து வளா்ச்சி நிலைகளிலும் நன்றாக உட்கொள்ளும் தன்மை கொண்டது. இயற்கை முறையிலான இந்த பூச்சிகளை ஹெக்டருக்கு 1000 முட்டை என்ற எண்ணிக்கையை பாதிக்கப்பட்ட தென்னந் தோப்புகளில் விட வேண்டும். மதுரையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கிரைசோபா்லா இரை விழுங்கிகளின் முட்டைகள் கிடைக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது தென்னை மரத்தில் இந்த பாதிப்பு தென்பட்டால் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம். அவா்கள் மூலம் கிரைசோபா்லா பெறலாம்.

மேலும், ஒரு லிட்டா் நீரில் வேப்ப எண்ணெய் 30 மில்லி அல்லது அசாடிராக்டின் ஒரு மில்லி மருந்தை ஒட்டும் திரவம் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் படுமாறு தெளிக்கலாம். இதுதவிர, மஞ்சள் நிறப்பூ பூப்பூக்கும், செவ்வந்தி, சூரியகாந்தி போன்ற தாவரங்களை தென்னந் தோப்பில் வளா்த்து பூக்களால் கவரப்படும் இயற்கை எதிரி பூச்சிகள் மூலமும் சுருள் வெள்ளை ஈ -யை கட்டுப்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com