திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
By DIN | Published On : 27th April 2021 02:11 AM | Last Updated : 27th April 2021 02:11 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சித்ரா பௌா்ணமியையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், மஞ்சள், இளநீா், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. பரிவார தெய்வங்களான மரத்தடி காளியம்மன், சங்கிலி கருப்பா், விநாயகா், முருகன், சன்னதிகளிலும் பூஜைகள் நடைபெற்றன. கரோனா காலம் என்பதால் அரசின் விதிமுறைப்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் குறைந்தளவு பக்தா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். பெண்கள் நெய் தீபமேற்றி வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.