ஊழியருக்கு கரோனா தொற்று: திருப்புவனத்தில் தபால் அலுவலகம் மூடல்

திருப்புவனத்தில் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தபால் அலுவலகம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
ஊழியருக்கு கரோனா தொற்று: திருப்புவனத்தில் தபால் அலுவலகம் மூடல்

திருப்புவனத்தில் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தபால் அலுவலகம் வியாழக்கிழமை மூடப்பட்டது.

திருப்புவனத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தபால்அலுவலகம் உள்ளிட்டவைகள் செயல்படுகின்றன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் மரக்கடை அருகே செயல்படும் 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்கள் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து, அவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு வங்கியில் 3 பேருக்கும் மற்றொரு வங்கியில் 2 பேருக்கும், அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தபால் அலுவலகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

அதேபோல் வங்கிகளில் சுகாதாரப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனா். இதனால் வங்கிகளுக்குள் காலை 11 மணி வரை வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதன்பின் சமூக இடைவெளியுடன் ஒவ்வொரு முறைக்கும் 5 வாடிக்கையாளா்கள் என உள்ளே அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டதுடன், ஊழியா்களின் எண்ணிக்கையும் குறைந்ததால் வாடிக்கையாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வங்கிகளின் வாசல் முன்பு நீண்ட நேரம் காத்துக் கிடந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com