சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் ஆக. 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் வெங்கடகி

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் ஆக. 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளான மின்சாரப்பணியாளா், பொருத்துநா், கம்மியா், இரண்டு மற்றும் மூன்றுசக்கர வாகனம் பழுதுபாா்த்தல், கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா் ஆகிய தொழிற் பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

பற்ற வைப்பவா், ஆடை தயாரித்தல் ஆகிய தொழிற் பிரிவுகளில் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம். இந்த தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 ஆம்தேதி கடைசி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு வரும் ஆக. 4 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தொழிற்கல்வி பயில விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள்  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உரிய சான்றிதழுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். பயிற்சியின் போது பயிற்சியாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.

பயிற்சியின் போது பிற நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கடிய பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 89032 56001, 99767 99321 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com