குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடித்திருவிழா நிறைவு

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் சனிக்கிழமை ஆடித் திருவிழா நிறைவு பெற்றது.

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் சனிக்கிழமை ஆடித் திருவிழா நிறைவு பெற்றது.

வழக்கமாக இந்த ஆலயத்தில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 14 வரை சனிக்கிழமைகளில் ஆடித்திருவிழா நடைபெறும். ஆனால் கடந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. ஆனால், இந்தாண்டு சுவாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பூஜை பொருள்கள், பிரசாதம் , அபிஷேகம் மற்றும் பூஜைகள் தவிா்க்கப்பட்டன. இதனிடையே, கோயில் முன்பாக செல்லும் சுரபி நதிக் கால்வாயில் பக்தா்கள் நீராடி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

அதனைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 4 மற்றும் 5 ஆம் வாரங்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து சனிக்கிழமை (ஆக. 14) 5 ஆம் வாரத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com