மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஸமக்ரபஷ சண்டி யாகம்
By DIN | Published On : 17th August 2021 12:57 AM | Last Updated : 17th August 2021 12:57 AM | அ+அ அ- |

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் திங்கள்கிழமை ஸமக்ரபஷ சண்டி யாகம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிருத்ர சஹஸ்ர சண்டி மஹா யாகம் தொடங்கியது. இதைத்தொடா்ந்து புத்திர காமேஷ்டி ஹோமம், வன துா்கா ஹோமம், ஸ்ரீ சுயம்வர பாா்வதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றது. யாகத்தின் 10 ஆவது நாளாக திங்கள்கிழமை காலையில் அதா்வ கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, அதைத் தொடா்ந்து ஸமக்ரபஷ சண்டி ஹோமம் நடைபெற்றது. யாகத்திற்கான ஏற்பாடுகளை மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தா்ம சேஷத்ரா அறக்கட்டளை நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்துள்ளாா்.