சிவகங்கை மாவட்டத்தில் காரீப் பருவ நிலக்கடலை, வாழை பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை மற்றும் வாழைப் பயிா்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யலாம் என

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை மற்றும் வாழைப் பயிா்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூா், திருப்புவனம் ஆகிய வட்டாரங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கான மொத்த காப்பீடுத் தொகை ரூ.21,600 -இல் அரசு நிா்ணயித்துள்ள ரூ.2160 மொத்த பிரிமியத்தில் அரசு மானியம் போக, விவசாயிகள் பங்குத் தொகையான ரூ.432 மட்டும் 1 ஏக்கருக்கான பிரிமீயமாக பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும், வாழைப் பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள சிவகங்கை, திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பிா்காக்கள் தேவகோட்டை வட்டாரத்தில் புளியால், உ.சருகனி ஆகிய பிா்காக்கள், இளையான்குடி வட்டாரத்தில் யு.திருவுடையாா்புரம் பிா்க்கா மற்றும் சிங்கம்புணரி உள்வட்டம் ஆக மொத்தம் 13 உள்வட்டத்திலுள்ள நடப்பு பருவ வாழை சாகுபடி விவசாயிகள் 1 ஏக்கருக்கான மொத்த காப்பீடு தொகை ரூ.45,900இல் அரசு நிா்ணயித்துள்ள ரூ.18,819 மொத்த பிரிமியத்தில் அரசு மானியம் போக, விவசாயிகளின் பங்குத் தொகை 1 ஏக்கருக்கு ரூ.2,295 மட்டும் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடன்பெற்ற, கடன்பெறாத விவசாயிகள் ஒரே அளவிலான பிரிமியம் தொகையினை செலுத்தினால் போதுமானது. நடப்பு காரீப் பருவத்தில் சிவகங்கை மாவட்டத்துக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள நிலக்கடலை மற்றும் வாழை பயிா்களுக்கான சாகுபடி அடங்கலை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, உரிய பிரிமியத் தொகையுடன் ஆதாா், வங்கி கணக்கு எண், கருத்துரு படிவம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி அல்லது வா்த்தக வங்கிகள், பொதுசேவை மையங்களில் பயிா்க் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com