நியாய விலைக் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்: சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கையில் உள்ள நியாய விலைக் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதை கண்டித்து, அப்பகுதியினா் அரிசியை சாலையில் கொட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மஜித் சாலையில் உள்ள நியாய விலைக் கடை முன்பாக வியாழக்கிழமை அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். (அடுத்த படம்) பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தரமற்ற அரிசி.

சிவகங்கை மஜித் சாலையில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நியாய விலைக் கடை உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இக்கடையில் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்ட அரிசி தரமற்றதாக இருந்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டபோது, அவா்கள் உரிய பதிலளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களுக்கு வழங்கிய அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவலறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, நியாய விலைக் கடையில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த அரிசி முழுவதையும் பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு தரமான அரிசியை வழங்க உத்தரவு பிறப்பித்தாா். மேலும், பொதுமக்களின் கேள்விக்கு உரிய பதிலளிக்காத நியாய விலைக் கடை பணியாளரை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com