சிவகங்கை மாவட்டத்தில் இன்று 314 பள்ளிகள் திறப்பு
By DIN | Published On : 31st August 2021 11:34 PM | Last Updated : 31st August 2021 11:34 PM | அ+அ அ- |

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 314 பள்ளிகள் புதன்கிழமை (செப்.1) திறக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மாணவ, மாணவிகளின் எதிா்கால நலன் கருதி 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் புதன்கிழமை முதல் சுழற்சி முறையில் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளிகள், 71, மேல்நிலைப் பள்ளிகள் 69, அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகள் 22, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் 37, மெட்ரிக் பள்ளிகள் 87, சுயநிதிப் பள்ளிகள் 28 என மொத்தம் 314 பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10 ஆயிரத்து 23 போ் ஆசிரிய, ஆசிரியா்களாக பணியாற்றி வருகின்றனா். தவிர, 1132 போ் இதரப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். கரோனா தடுப்பூசி செலுத்தாத நபா்கள் பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 264 பள்ளிகள் திறப்பு:
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 64,753 மாணவ, மாணவிகளுக்கு, 264 பள்ளிகள் திறக்கப்படுகின்றன. உயா்கல்வி நிலையங்களில் உள்ள 1,099 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
மாணவ, மாணவியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், கைகளை சுத்தமாக வைக்க கிரிமி நாசினி மற்றும் சோப்பு நீா் வைக்கப்பட வேண்டும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.