இளங்குடியில் பழைமையான சிவன் கோயில் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இளங்குடி கிராமத்தில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில் புனரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இளங்குடி கிராமத்தில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில் புனரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் அடிக்கல் நாட்டி பணியினை தொடக்கி வைத்தாா். வேரெங்கும் இல்லாத வகையில் முக்கோண வடிவிலான ஆவுடையுடன் இங்கு சிவன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். கோயிலின் முன்வாசலில் உள்ள நந்திகேசுவரரின் தாடையில் இருந்து சிவப்பு நிற திரவம் சுரக்கும் அற்புத நிகழ்வு இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.

ரூ. 3 கோடி செலவில், இக்கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இதில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com