முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடி புகைப்பட கலைஞா்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம்
By DIN | Published On : 19th December 2021 11:02 PM | Last Updated : 19th December 2021 11:02 PM | அ+அ அ- |

சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடிக்கு நினைவுப்பரிசு வழங்கிய சங்கத்தின் தலைவா் கே.பாண்டியராஜன்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புகைப்பட கலைஞா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு விடியோ- புகைப்படக் கலைஞா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ஓ.கே. பிரம்லால் தலைமை வகித்தாா். மூத்த புகைப்பட கலைஞா்கள் கல்லல் என். ராமநாதன், காரைக்குடி எஸ். அருணாசலம், கே. சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காரைக்குடி விடியோ-புகைப்பட கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் கே. பாண்டியராஜன், செயலாளா் எஸ். கணேசன், பொருளாளா் டி. சண்முகம் ஆகியோா் பேசினா்.
இதில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எஸ். கலையரசி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனா்.