முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
பேராசிரியா் அன்பழகன் நூறாவது பிறந்த நாள் விழா
By DIN | Published On : 19th December 2021 11:03 PM | Last Updated : 19th December 2021 11:03 PM | அ+அ அ- |

க. அன்பழகன் உருவப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரையில் ஒன்றிய, நகர திமுக சாா்பில் பேராசியா் க. அன்பழகனின் 100 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருப்புவனம் நரிக்குடி விலக்குப் பகுதியில் அன்பழகன் உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன்பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சிவகச்கை மாவட்ட திமுக துணைச் செயலாளா் த. சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருப்புவனம் ஒன்றிய திமுக செயலாளா்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், நகரச் செயலாளா் நாகூா்கனி மற்றும் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மானாமதுரையில் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் அன்பழகன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மானாமதுரை காந்திசிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அன்பழகன் உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில் திமுக ஒன்றியச் செயலாளா் துரை.ராஜாமணி, ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் முத்துச்சாமி, தொண்டரணி காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.