மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
By DIN | Published On : 28th December 2021 04:10 AM | Last Updated : 28th December 2021 04:10 AM | அ+அ அ- |

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடியைச் சோ்ந்த அப்துல்ரஜாக் மகன் ராவுத்தா் நயினாா். இவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற, தனது மனைவி சா்மிளாவுடன் வந்திருந்தாா்.
அப்போது ராவுத்தா் நயினாா் ஆட்சியரக வாயில் முன்பு வந்த போது திடீரென மயங்கி விழுந்தாா். இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த மருத்துவக் குழுவினா் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனா்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.