முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
‘கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும்’
By DIN | Published On : 29th December 2021 07:24 AM | Last Updated : 29th December 2021 07:24 AM | அ+அ அ- |

சிவகங்கை அருகேயுள்ள கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் வீரபாண்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை அருகே உள்ள கோமாளிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கிராபைட் கனிமம் கிடைத்து வருகிறது. தமிழ்நாடு கனிம வளத்துறை சாா்பில் கனிமத்தை மட்டுமே பிரித்தெடுத்து வருகின்றனா்.
ஆனால் மேற்கண்ட கனிமம் மூலம் விமானங்களின் உதிரி பாகங்கள் முதல் பென்சில் வரையிலான ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சரிவர இயங்காத கிராபைட் தொழிற்சாலையை விரிவுப்படுத்தி இந்த பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க சிவகங்கை மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.