முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பத்தூரில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்பு
By DIN | Published On : 29th December 2021 07:26 AM | Last Updated : 29th December 2021 07:26 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அச்சுக்கட்டு மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்த பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அச்சுக்கட்டு பகுதியில் உள்ள மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனு:
திருப்பத்தூா்-சிங்கம்புணரி சாலையில் அச்சுக்கட்டு பகுதியில் அகமுடையாா் உறவின்முறைக்கு சொந்தமான மயானத்தில் ஒரு கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக எரிவாயு மயானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பத்தூா் நகரில் சடலங்கள் புதைக்கப்படுகின்ற வழக்கமே நீண்டகாலமாக இருந்து வருகிறது. எரிவாயு தகன மேடை அமைக்கும் பட்சத்தில் தொன்றுதொட்டு நடைபெறும் சம்பிரதாயங்கள் அழியும் அபாயம் உள்ளது. மேலும் நுகா்பொருள் வாணிபக் கழகம், பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு அச்சுக்கட்டு பகுதியில் எரிவாயு மயானம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் வகையில் அரசு பொதுவான இடத்தை தோ்வு செய்து எரியூட்டும் மேடை அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.