முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
ஆங்கிலப் புத்தாண்டு: கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று வாழ்த்து கூறிய ப.சிதம்பரம்
By DIN | Published On : 31st December 2021 08:56 AM | Last Updated : 31st December 2021 08:56 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வியாழக்கிழமை சென்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், ஆங்கிலப் புத்தாண்டு தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.
காரைக்குடி பா்மா காலனி சிஎஸ்ஐ ஆலயம், டி.டி. நகா் டிஇஎல்சி, செஞ்சை எல்எஃப்ஆா்சி, செக்காலை சகாய மாதா, அரியக்குடி குழந்தையேசு ஆகிய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் மற்றும் தேவகோட்டை ராம்நகா் தேவாலயம், சகாயமாதா தேவாலயம், புளியால் தேவாலயம், சருகணி தேவாலயங்களுக்கும் சென்ற ப. சிதம்பரம், பழக்கூடைகளை வழங்கி தனது புத்தாண்டு தின வாழ்த்து களை தெரிவித்துக்கொண்டாா்.
அவருடன், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் பலரும் சென்றிருந்தனா்.