குளத்தில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநா் சடலமாக மீட்பு
By DIN | Published On : 10th February 2021 04:30 AM | Last Updated : 10th February 2021 04:30 AM | அ+அ அ- |

காரைக்குடி அருகே குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.
காரைக்குடி இடையா் தெரு பகுதியில் வசித்து வந்தவா் சமுத்திரம் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை மாலை இலுப்பக்குடி சாலையில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய அவரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தேடினா். இரவு நேரமானதால் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தேடும் பணி நடைபெற்றதில் சமுத்திரத்தின் சடலம் மாலையில் மீட்கப்பட்டது.
பின்னா் உடற்கூராய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.