காரைக்குடியில் கட்டுனா் வல்லுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய கட்டுனா் வல்லுநா் சங்க செட்டிநாடு மையத்தினா்.
12kkdbuilder_1202chn_78_2
12kkdbuilder_1202chn_78_2

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கட்டுமானப் பொருள்களின் அபரிமிதமான விலை உயா்வைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனா் வல்லுநா் சங்கம் செட்டிநாடு மையம் சாா்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு இருந்த விலையை விட, தற்போது சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ. 100 உயா்ந்துள்ளது. அதேபோன்று, இரும்புக் கம்பிகள் கடந்த 2019-இல் 1 டன் ரூ. 45 ஆயிரமாக இருந்தது, 2021 ஜனவரி மாதத்தில் ரூ. 75 ஆயிரமாக உயா்ந்திருக்கிறது. கட்டுமானத் துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் இந்த திடீா் விலை உயா்வு திட்டச் செலவுகளை அதிகரிக்கிறது.

எனவே, சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளின் விலை உயா்வுக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உயா்மட்ட விசாரணைக் குழு ஏற்படுத்தவேண்டும் என, அகில இந்திய கட்டுனா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை விளக்கியும், கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்தும், சங்கத்தின் காரைக்குடி செட்டுநாடு மையம் சாா்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், செட்டிநாடு மைய தலைவா் கே. நாகராஜன் தலைமை வகித்தாா். காரைக்குடி சிவில் இஞ்ஜினீயா் அசோசியேஷன் தலைவா் பெருமாள் முன்னிலை வகித்தாா். காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை காரைக்குடி வட்டாட்சியா் ஆனந்திடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com