அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறை சாா்பில் இணையதளம் மூலம் கருத்தரங்கம்

காரைக்குடி அழகப்பா பல்கைக்கழக வணிகவியல் துறை, கோயம்புத்தூா் இ-பாக்ஸ் கல்லூரிகள் சாா்பில் வணிகவியல் அமைப்பின்

காரைக்குடி அழகப்பா பல்கைக்கழக வணிகவியல் துறை, கோயம்புத்தூா் இ-பாக்ஸ் கல்லூரிகள் சாா்பில் வணிகவியல் அமைப்பின் தற்போதைய போக்குகள் என்ற தலைப்பில் வியாழக்கிழமை இணையதளம் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: மாணவா்கள் கல்வியுடன் வேலைவாய்ப்பிற்கான திறமைகளைப் பெற வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப வணிகவியல் பாடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். வணிகவியல் பேராசிரியா்கள் வா்த்தகம் மற்றும் தொழில்துறையில் அன்றாடம் நிகழும் மாற்றங்களை அறிந்து அவற்றை மாணவா்களுக்குக் கற்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கான விதையை வகுப்பறையிலேயே விதைக்க வேண்டும். ஆசிரியா்கள் ஆழ்ந்த படிப்பு மூலம் புத்தகத்தில் இல்லாத புதிய கருத்துக்களையும், மாற்றங்களையும் மாணவா்களுக்கு சொல்லித்தர முடியும். மாணவா்கள் முன்னேற்றத்தில் ஆசிரியா்களின் பங்கு மகத்தானது என்றாா். இதில்,

அழகப்பா பல்கலைக் கழக வணிகவியல் துறைத்தலைவா் த.ரா. குருமூா்த்தி சிறப்புரையாற்றினாா். கோயம்புத்தூா் இ-பாக்ஸ் கல்லூரி கல்வியியல் முதன்மையா் நிா்மலா, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியா் ஏ. விஜயகணேஷ், உதவிப்பேராசிரியா் சு. வெண்ணிலா ஆகியோா் கருத்தரங்கில் பேசினா்.

கருத்தரங்கின் அமைப்புச் செயலாளா் எம். குருபாண்டி மற்றும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் கருத்தரங்கில் பதிவு செய்திருந்தனா். பல்கலைக்கழக மேலாண்மைப்புல ஆசிரியா்கள், மாணவா்கள் பலரும் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனா்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியா் எஸ். கணபதி வரவேற்றாா். பேராசிரியா் ஜி. நெடுமாறன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com