சிவகங்கையில் இன்று விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்
By DIN | Published On : 19th February 2021 03:00 AM | Last Updated : 19th February 2021 03:00 AM | அ+அ அ- |

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ( பிப்.19) விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சி.கே.சா்மிளா(விவசாயம்) தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்.19) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டமானது, ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மனு அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.