சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 19th February 2021 02:00 AM | Last Updated : 19th February 2021 02:00 AM | அ+அ அ- |

சிவகங்கை பகுதியில் சனிக்கிழமை (பிப். 20) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் சனிக்கிழமை (பிப். 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, சிவகங்கை நகா், புதுப்பட்டி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சாமியாா்பட்டி, சோழபுரம், காஞ்சிரங்கால், காமராசா் காலனி, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை (பிப். 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.