மானாமதுரை அருகே கோஷ்டி பிரச்னையால் நெல் கொள்முதல் நிலையம் மூடல் 

மானாமதுரை அருகே சின்னக் கண்ணனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளூர் கோஷ்டி பிரச்னை தொடர்பாக திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது
நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் காத்துக்கிடக்கும் விவசாயிகள்.
நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் காத்துக்கிடக்கும் விவசாயிகள்.

மானாமதுரை அருகே சின்னக் கண்ணனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளூர் கோஷ்டி பிரச்னை தொடர்பாக திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் நெல்லை கொள்முதல் செய்ய வந்த விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சின்னக் கண்ணனூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூடைகளை இந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கு நெல் மூடைகளை அடுக்கி வைத்து விற்பனை செய்ய இரவு பகலாக காத்துக் கிடக்கின்றனர். 
இந்நிலையில் சின்னக்கண்ணனூர் கிராமத்தில் இரு தரப்பினரிடையே கொள்முதல் நிலையத்தில் யார் அதிகாரம் செலுத்துவது என்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. 
இதையடுத்து சின்னக் கண்ணனூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சின்ன கண்ணனூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள நெல் கொள்முதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com