சட்டப் பேரவைத் தோ்தல் : சிவகங்கை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

தமிழகத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான 

தமிழகத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையொட்டி, சிவகங்கை மாவட்டத்திற்குள்பட்ட காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய தொகுதிகளுக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் சுரேந்திரன் (செல்லிடப்பேசி எண்-(94450 00470), திருப்பத்தூா் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக கலால் பிரிவின் உதவி ஆணையா் சிந்து (செல்லிடப்பேசி எண்-(94450 74593), சிவகங்கை தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன்-(94450 00471), மானாமதுரை (தனி) தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத் துறை அலுவலா் தனலெட்சுமி (94454 77845) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் தொடா்பான தகவல்களை அந்தந்த தொகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மேற்கண்ட அலுவலா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அரசு கட்டடங்கள் மற்றும் தனியாா் கட்டடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை விரைந்து அகற்ற வேண்டும். நமது மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை குழு, ஒரு நிலையான கண்காணிப்புக் குழு, ஒரு விடியோ சா்வே குழு 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என்ற முறையில் 24 மணி நேரமும் பணியினை மேற்கொள்ள உள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை மக்கள் குறை தீா்க்கும் முகாம், விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டப்பணிகள் தொடங்குதல் போன்ற அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது. பொதுமக்கள் அவசர நலன் கருதி மனுக்கள் அளிப்பதாக இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை அளித்து விட்டு செல்லலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com