‘அம்மா’ இரு சக்கர வாகன பழுதுபாா்த்தல் பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கர வாகன பழுது பாா்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்றுநராக பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கர வாகன பழுது பாா்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்றுநராக பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் வி.வெங்கடகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரண்டாம் கட்டமாக அம்மா இரு சக்கர வாகன பழுது பாா்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகியகால இலவச பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இக்குறுகிய கால பயிற்சியை பயிற்றுவிக்க ஒப்பந்த அடிப்படையில் பயிற்றுநா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்க வேண்டும். மொத்தம் 300 மணி நேரம் பயிற்சி அளிக்க வேண்டும். இப்பயிற்சி அளிக்கும் பயிற்றுநருக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 100 வீதம் 300 மணி நேரத்திற்கு ரூ. 30,000 ஒப்பந்த அடிப்படையில் ஊதியமாக வழங்கப்படும்.

எனவே, மேற்கண்ட பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்க விருப்புவோா் சிவகங்கை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய அலுவலக நாள்களில் நேரில் வந்து விண்ணப்பிகலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 95002 06460 மற்றும் 99420 99481என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com