குன்றக்குடியில் கிராம மக்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கண்மாய்த் தண்ணீரை திறந்து விட்ட மா்ம நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குன்றக்குடியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சின்னகுன்றக்குடி கண்மாய் தண்ணீரை மா்ம நபா்கள் இரவோடு இரவாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வெளியேற்றி அருகே சாலிக்கண்மாய்க்கு செல்லும் வகையில் திருப்பிவிட்டதை கிராம மக்கள் கண்டறிந்தனா்.

இதையடுத்து எந்தவித அனுமதியும் இல்லாமல் கண்மாயில் தண்ணீரை திறந்துவிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி குன்றக்குடி கிராம மக்கள் அங்குள்ள பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com