சிராவயலில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கானஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பத்தூா் அருகே சிராவயலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள்.
திருப்பத்தூா் அருகே சிராவயலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள்.

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கானஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பத்தூா் அருகே உள்ள சிராவயலில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு தை 3 ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். ஆனால் மஞ்சுவிரட்டு மீட்புப் போராட்டத்திற்குப் பிறகு மஞ்சுவிரட்டுக்குப் பதிலாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை சிராயவல் அம்பலக்காரா் கரு.வேலுச்சாமி தலைமையில் அக்கிராமத்தினா் செய்து வருகின்றனா். இங்கு வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி அன்று காலை 11.00 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடா்ந்து முன்னோா் வழிபாடு செய்து நாட்டாா்கள் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு அழைத்து வரப்படுவாா்கள். அங்கு அனைத்து மாடுகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். அதனைத் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com