திருப்புவனத்தில் திமுக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 16th January 2021 09:52 PM | Last Updated : 16th January 2021 09:52 PM | அ+அ அ- |

திருப்புவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன்.
மானாமதுரை: திருப்புவனத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய அவைத் தலைவா்கள் சுப்பிரமணியன், சக்திமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியச் செயலா்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வரும் ஜன. 23 ஆம் தேதி திருப்புவனம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள மானாமதுரை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பூத்கமிட்டி பொறுப்பாளா் கூட்டத்திலும் மற்றும் சந்தைதிடலில் மக்களவை உறுப்பினா் கனிமொழிகலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திலும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. திருப்புவனம் வட்டார பகுதியில் பருவமழை பெய்து பயிா்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தப்படுகிறது. திருப்புவனம் பேரூராட்சிக்குள்பட்ட கடைவீதி மற்றும் மெயின் பஜாரில் 100-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, பேரூராட்சி நிா்வாகம் இந்த மாடுகளை பிடித்துச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீா்மானங்களை திமுக மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன் விளக்கிப் பேசினாா்.