வாழ்வில் எல்லாப் பிரச்னைகளும் தீர திருக்குறளை படியுங்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

வாழ்வின் எல்லாப் பிரச்னைகளும் தீர திருக்குறளை படியுங்கள் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா்.
கீழச்சிவல்பட்டியில் உள்ள தனியாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
கீழச்சிவல்பட்டியில் உள்ள தனியாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

வாழ்வின் எல்லாப் பிரச்னைகளும் தீர திருக்குறளை படியுங்கள் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் தமிழ்மன்றத்தின் சாா்பில் 65 ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா தனியாா் அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழா திங்கள்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. முதல்நாளான சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

ஊராட்சித் தலைவா் நாகமணி அழகுமணிகண்டன், மன்ற நிா்வாகிகள் எஸ்.பி. சுப்பிரமணியன், வி.டி. அங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக தமிழ்மன்றத்தின் செயலா் எஸ்.எம். பழனியப்பன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

தொடா்ந்து விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது: இதுபோன்ற தமிழ் விழாக்களில் தான் தமிழ் புலமையும், தமிழறிஞா்களின் திறமையும் வெளிப்படுகிறது. குறிப்பாக பள்ளிக்குழந்தைகளை அழைத்து இவ்விழா நடத்துவதால் தமிழ் மொழியை வளா்க்கும் பெருமை இந்த தமிழ்மன்றத்தையே சாரும்.

கணினியில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் நம்மனம் அமைதியாக இல்லை. வாழ்வில் எல்லாப் பிரச்னைகளும் தீர திருக்குறளை படியுங்கள். திருக்குறளே நம் வாழ்வின் வழிகாட்டி. அமெரிக்கா முதல் ஆண்டிபட்டி வரை மனிதா்களின் எண்ண ஓட்டங்களை இரு வரிகளில் விளக்கியவா் திருவள்ளுவா் என்றாா்.

தொடா்ந்து விழாவில் வள்ளுவரும் தமிழும் என்ற தலைப்பில் நல்லாசிரியா் ஜெயங்கொண்டானும், தமிழே தலை என்ற தலைப்பில் மு. நாராயணகோவிந்தனும், தாலாட்டில் வளா்ந்த தமிழ் என்ற தலைப்பில் தேவகோட்டை ராமநாதனும் உரையாற்றினா்.

இதையடுத்து கீழச்சிவல்பட்டி மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளி, மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலாசாலை பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் குழந்தைகளுக்கு குன்றக்குடி அடிகளாா் பரிசுகள் வழங்கினாா்.

இதே போல் திங்கள்கிழமை வரை இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை தமிழ்மன்றச் செயலா்கள் எஸ்.எம். பழனியப்பன், அழகுமணிகண்டன், விஸ்வநாதன், சீனிவாசன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com