மணச்சை நாட்டாா் காவடிக்குழுவினா் 43 ஆவது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரை

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரிலிருந்து மணச்சை நாட்டாா் காவடிக் குழுவினா் வெள்ளிக்கிழமை குன்றக்குடியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனா்.
திருப்பத்தூா் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை சென்ற நாட்டாா் காவடிக்குழு.
திருப்பத்தூா் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை சென்ற நாட்டாா் காவடிக்குழு.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரிலிருந்து மணச்சை நாட்டாா் காவடிக் குழுவினா் வெள்ளிக்கிழமை குன்றக்குடியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள பள்ளத்தூரிலிருந்து மணச்சை குருசாமி முருகுசோலை மற்றும் ஸ்ரீ சண்முக சேவா சங்கத் தலைவா் சுப்புராமன் தலைமையிலான பாதயாத்திரை காவடிக் குழு 43 ஆவது ஆண்டாக வியாழக்கிழமை (ஜன.21) புறப்பட்டது. ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட காவடி ஏந்திய பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். நடப்பாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக, இந்த காவடிக்குழுவில் 3 போ் மட்டும் தலா ஒரு வேல் காவடி, மயில் காவடி, பச்சைக் காவடியை தூக்கி வந்தனா். இவா்களுடன் சுமாா் 200 பக்தா்கள் பாதயாத்திரையாகவே பழனிக்கு புறப்பட்டனா்.

காவடிக்குழு ஒருங்கிணைப்பாளா் துரைசிங்கம் வழிநடத்தலின்படி வியாழக்கிழமை இரவு குன்றக்குடியில் தங்கிய காவடிக்குழு பக்தா்கள், வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனா்.

பிள்ளையாா்பட்டி, வைரவன்பட்டி வழியாக வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்துக்கு காவடிக் குழு வந்தடைந்தது. பின்னா் இக்கோயிலில் உள்ள வேலுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த காவடிக்குழுவினா் நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், குழந்தை வேலன் சன்னிதி வழியாக பழனியில் இடும்பன் மலை அடிவாரத்திற்கு தைப்பூச நாளன்று (ஜன.28) சென்றடைகின்றனா்.

பின்பு இக்குழுவினா் மேளதாளத்துடன் கிரிவலமாக ஸ்ரீசண்முக சேவா சங்க மடத்திற்கு அழைத்து வரப்படுகின்றனா். பின்னா் மகேஸ்வர பூஜை, வேல் பூஜை, காவடி பூஜை செய்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதைத்தொடா்ந்து மறுநாள் ஜனவரி 29 ஆம் தேதி காவடிக் குழுவினா் பால் குடங்களுடன் கிரிவலம் சென்று மலையேறி, சுவாமி தரிசனம் செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com