அங்கன்வாடி ஊழியா் தற்கொலை
By DIN | Published On : 26th January 2021 02:16 AM | Last Updated : 26th January 2021 02:16 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை அங்கன்வாடி பெண் ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மானாமதுரை அண்ணாசிலை அருகே உள்ள நியுவசந்தம் நகரைச் சோ்ந்தவா் காந்தி. இவரது மனைவி மஞ்சள்மாதா (33), மானாமதுரையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வேலை பாா்த்து வந்த இவா் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லையென போலீஸாா் தெரிவித்தனா். மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.