தேவகோட்டையில் எம்.ஜி.ஆா். சிலை பிப்ரவரியில் திறப்பு

தேவகோட்டையில் வரும் பிப்ரவரியில் எம்.ஜி.ஆா். முழு உருவ வெண்கலைச் சிலை திறக்கப்பட உள்ளது என கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேவகோட்டையில் எம்.ஜி.ஆா். சிலை பிப்ரவரியில் திறப்பு

தேவகோட்டையில் வரும் பிப்ரவரியில் எம்.ஜி.ஆா். முழு உருவ வெண்கலைச் சிலை திறக்கப்பட உள்ளது என கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் சமூக கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் தேவகோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இதில் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத்தலைவா் சுப. முத்துராமன் தலைமைவகித்தாா். சங்க நிறுவனரும் சமூக கல்வி அறக்கட்டளைத் தலைவருமான இரா. போஸ் முன்னிலைவகித்தாா். சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாள ரும் முன்னாள் எம்.பி-யுமான பிஆா். செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு எம்.ஜி.ஆா் உருவப்படத் தினை திறந்துவைத்து சிறப்புரையாற்றினாா்.

விழாவில் எம்.ஜி.ஆா் மன்ற துணைத்தலைவா் வெங்களூா் வீரப்பன், ராமநாதபுரம் மாவட்ட பால்வளத்தலைவா் கேஆா். அசோகன், தேவகோட்டை அதிமுக நகரச்செயலாளா் ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற விஏஓ சங்க மாநிலப்பொதுச்செயலா ளா் செ.ரா.ரவி ரெங்கராஜன், விஏஓ சங்க மாநிலப்பொதுச்செயலாளா் செந்தில்குமாா், முன்னாள் பொதுச்செயலாளா் பாக்கியநாதன், மாவட்ட அரசு வழக்கறிஞா் மற்றும் சங்க நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் தேவகோட்டையில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆா். முழு உருவ வெண்கலைச் சிலையை திறந்துவைக்க தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களை அழைப்பது என தீா் மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக எம்.ஜி.ஆா் சிலை அமைப்புக்குழு உறுப்பினா் ஆா்எம்.ரெங்கசாமி வரவேற்றுப்பேசினாா். முடிவில் சிலை திறப்புவிழா வரவேற்புக்குழு செயலாளா் ஆா். காசிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com